கைதி ஜெயமூர்த்தி குடும்பத்துக்கு ₹4.12 லட்சம் நிவாரணத் தொகை

புதுச்சேரி,  மே 30:    புதுச்சேரியில் மர்மமாக இறந்த கைதி ஜெயமூர்த்தி குடும்பத்துக்கு  ரூ.4.12 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.  கடலூர்  மாவட்டம், ரெட்டிச்சாவடி, கரிக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி  (25). பைக் திருட்டு வழக்கில் பாகூர் ேபாலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்  காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்தாண்டு நவம்பர் 27ம்தேதி  மரணமடைந்தார். விசாரணைக்கு அழைத்து சென்றபோது, அடித்து துன்புறுத்தியதால்தான் இறந்ததாக புகார் எழுந்தது. மர்ம சாவு விவகாரத்தில், பாகூர்  எஸ்ஐ, சிறை வார்டன் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக  மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டது.  இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அதன் பிறகு வன்கொடுமை  தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கைதி  ஜெயமூர்த்தியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அரசு  அறிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஜெயமூர்த்தி குடும்பத்தினருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம்  1989ன், சட்டவிதிகள் 1995ன்படியும், திருத்தப்பட்ட சட்டம் 2015ன் மற்றும்  விதிகள் 2016ன்படியும் ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக நிவாரணத் தொகையாக  ரூ.4,12,500 வழங்குவதற்கான ஆணை பிறக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான  காசோலையை இறந்த கைதி ஜெயமூர்த்தியின் மனைவி கவுசல்யாவிடம் சட்டசபையில்  நேற்று நலஅமைச்சர் கந்தசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது திமுக  தெற்கு அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர்  ரகுநாதன், மக்கள் உரிமைப்பு கூட்டமைப்பு சுகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர். இறந்த கைதியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை கிடைக்க உதவிய அமைச்சர்,  எம்எல்ஏ, அதிகாரிக்கு சுகுமாரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: