அரசு பொருட்காட்சியில் கைத்தறி துறை அரங்கத்திற்கு மூடுவிழா பொதுமக்கள் ஏமாற்றம்

மதுரை, மே 28:  அரசு பொருட்காட்சியில் கைத்தறித்துறை அரங்கம் பூட்டப்பட்டதால் அதனை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமுக்கம் மைதானத்தில், அரசு பொருட்காட்சி நடத்தப்படும். இந்தாண்டு, கடந்த ஏப்.14ம் தேதி முதல் பொருட்காட்சி நடந்து வருகிறது.

அரசுத்துறை மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் என மொத்தம் 50க்கு மேற்பட்ட துறையினர் அரங்கம் அமைத்து, துறை சார்ந்த திட்டப்பணிகள் குறிப்பாக புதிய திட்டம் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிபடுத்தி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு துறையில் உள்ள அரங்கிலும் என்ன திட்டங்கள் உள்ளது என இந்த பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்கள் பார்வையிட்டு, தெரிந்து கொள்வார்கள்.

நேற்று பொருட்காட்சியில் கைத்தறி துறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. தற்போது பொதுமக்கள், காட்டன் ஆடை, கதர் ஆடையை விரும்பி வாங்கி அணிந்து வருகின்றனர். இதனால் பொருட்காட்சியில் இத்துறையின் அரங்கத்தில் புதிய ஆடைகள் உள்ளதா, என்ன திட்டம் என காண வந்தனர். ஆனால் அரங்கம் பூட்டப்பட்டிருந்தது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை.

Related Stories: