‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் ஆண்டாள் கோயிலுக்கு கிருஷ்ணர் ரதயாத்திரை வருகை

திருவில்லிபுத்தூர், மே 25:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்த கிருஷ்ணர் ரத யாத்திரையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

கர்நாடக மாநிலம் மேல்கோட்டையிலுள்ள சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் மன்னார்குடி அலங்கார ஜீயர் சுவாமிகள், அமெரிக்காவை சேர்ந்த யதீந்திரா மகா தேசிக ஜீயர் சுவாமிகள்,  கோரக்பூர் பராங்குச ஜீயர் சுவாமிகள் ஆகியோர் ஏற்பாட்டின்படி கிருஷ்ண பகவானின் திருஉருவச்சிலை கொண்ட ரதயாத்திரை கடந்த மே மாதம் மேல்கோட்டையில் துவங்கி தமிழகம் முழுவதும் உள்ள வைணவ கோயில்களுக்கு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்த ரதயாத்திரையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ரதத்துடன் வந்த ஜீயர் சுவாமிகள் ஆண்டாள் கோயில் மற்றும் வடபத்திர சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இந்த ரதயாத்திரை 45 நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள திவ்ய தேசங்கள் சென்று இறுதியில் ஜூலை 7ம் தேதி நேபாளத்தில் உள்ள தாமோதர குண்டம் என்ற இடத்தை அடைந்து, அங்கு ரத யாத்திரையில் கொண்டுவரப்பட்ட கிருஷ்ண பகவானின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

Related Stories: