வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் திருமாவளவனிடம் வழங்கல்

அரியலூர், மே 25:  சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சான்றிதழை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார். சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிட்டார். சிதம்பரம் மக்களவை தொகுதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியது. இத்தொகுதியின் மொத்த வாக்குகள் 14,79,108 ஆகும். இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது.  இதில் 24 சுற்றுகள் முடிவில் 4,98,401 வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் 1,828யையும் சேர்த்து மொத்தம் 5,00,229 வாக்குகள் பெற்று 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார்.

அமமுக வேட்பாளர் இளவரசன் 62,308 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரவி 15,334 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவஜோதி 37,471 வாக்குகளும், அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளர் கிருஷ்ணராஜ் 4,675 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பார்வதி 4,100 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர்கள் கலையரசன் 2155, கிட்டு 1200, கிருஷ்ணகுமாரி 1706, குருசாமி 7012, பெரியசாமி 1464, ஜெகதீசன் 2993 வாக்குகளும், நோட்டாவுக்கு 15,535 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சான்றிதழை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.உணவு  உற்பத்தியை அதிகரிக்கவும்,  அதிக மகசூல் பெறுவதற்காகவும்,  தொழிற்நுட்பங்கள்  மற்றும் இடு பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அவற்றுள் ரசாயன உரங்கள்,  பூச்சி, நோய் மற்றும் களைக் கொல்லி  மருந்துகள் மிக முக்கியமானவை.

Related Stories: