சாலையோர மரங்களில் விளம்பர பலகை அடிக்க தடை விதிக்கப்படுமா?

உடன்குடி, மே 25: சாலையோர மரங்களில் விளம்பர பலகை ஆணி வைத்து அடிப்பதை தடை செய்ய வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தூய்மையான காற்று, மழை வளத்துக்கு மரங்கள் பேருதவி பெருகின்றன. மழை குறையும்போது மரங்களின் அவசியம் குறித்து கூக்குரலிடுவதும், மரம் வளர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமும் தீவிரமடையும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மரம் வளர்ப்பு குறித்து பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வு நடவடிக்கையிலும், மரக்கன்று நடுவதையும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சாலையோர மரங்களில் விளம்பர பலகை மாட்டுவதற்காக ஆணி அடித்து அதன் ஆயுளை குறைக்கும் நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களில் விளம்பர பலகை அடிப்பதை தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க மாநில பொதுச்செயலாளர் முகைதீன், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில், மரங்களின் மீது விளம்பர போர்டுகளை ஆணிகளால் அடித்து அவற்றின் ஸ்திரத்தன்ைமயை சிதைத்தல் ெதாடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் மரங்களின் உயிர்தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பாக மரங்களின் மீது இதுபோன்று விளம்பர போர்டுகளை ஆணி கொண்டு அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2013ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தி மரங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.    

Related Stories: