திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தேர்தலில் 36 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்: நோட்டாவைவிட மய்யம் வாக்கு குறைந்தது

திருவண்ணாமலை, மே 25: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட 40 வேட்பாளர்களில், 36 பேர் டெபாசிட் இழந்தனர். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக உள்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, 6,66,272 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3,62,085 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை பெற்றிருக்கிறார். அதேபோல், அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடந்த 1998ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 274 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். மக்களவைத் தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களில், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்பட 23 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டுமே டெபாசிட் பெற்றார். பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கு பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆரணி மக்களவைத் தொகுதியில போட்டியிட்ட 15 வேட்பாளர்களில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், 6,17,750 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, 3,86,954 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும், இந்த தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்பட 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அதிமுக வேட்பாளர் மட்டும் டெபாசிட் ெதாகையை திரும்பப் பெற்றார். ஆரணி மக்களவைத் தொகுதியில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நோட்டா சின்னத்திற்கு 16,921 வாக்குகள் கிடைத்திருந்தது. மக்கள் நீதி மய்யம் 14,776 வாக்குகள் கிடைத்துள்ளது. எனவே, நோட்டாவைவிட குறைந்த வாக்குகளை பெறும் நிலை மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம்:

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி:

சி.என்.அண்ணாதுரை         (திமுக)         666272

அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி  (அதிமுக)       362085

ஏ.ஞானசேகர்                (அமமுக)        38639

இரா.அருள்                  (மநீமய்யம்)      14654

பா.பாபு                     (பகுஜன் சமாஜ்)    4124

இரா.ரமேஷ்பாபு             (நாம் தமிழர்)     27503

எஸ்.காளஸ்திரி        (அகில இந்திய உழவர்

                        உழைப்பாளர்கள் கட்சி) 1999

சுயேட்சைகள் விவரம்:

டி.எஸ்.அண்ணாதுரை        சுயேட்சை        937

எஸ்.அண்ணாதுரை          சுயேட்சை        1218

ப.அண்ணாதுரை             சுயேட்சை        858

மு.அன்பழகன்               சுயேட்சை        824

ப.இந்திரமோகன்             சுயேட்சை        728

பி.எஸ்.உதயகுமார்           சுயேட்சை       759

மு.ஐயப்பன்                  சுயேட்சை       851

எஸ்.கருணா                 சுயேட்சை       1855

எஸ்.கலைமணி              சுயேட்சை        1632

அ.கிருஷ்ணமூர்த்தி           சுயேட்சை        4177

ஆர்.கிருஷ்ணமூர்த்தி          சுயேட்சை        3999

தி.சிவகுருராஜ்                சுயேட்சை        1758

ம.படவேட்டான்               சுயேட்சை        606

க.ரகுநாதன்                   சுயேட்சை        506

தி.ராஜேந்திரன்                சுயேட்சை        571

அ.விக்னேஷ்வரன்            சுயேட்சை        606

அ.விஜயன்                   சுயேட்சை        623

ஆர்.வேலு                    சுயேட்சை        1638

நோட்டா                                      12,317

---------------------------------------------------

ஆரணி மக்களவைத் தொகுதி

எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) 6,17,750

வெ.ஏழுமலை (அதிமுக)        3,86,954

ஜி.செந்தமிழன் (அமமுக)        46,383

வி.ஷாஜி (மநீமய்யம்) 14,776

அ.தமிழரசி (நாம்தமிழர்) 32,409

கா.சிவபிரகாஷ் (பகுஜன் சமாஜ்) 5,678

கா.சக்திவேல் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) 5,317

க.சுந்தர் (ஆன்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) 1,972

க.ஏழுமலை சுயேட்சை        903

சு.ஏழுமலை சுயேட்சை        641

பா.கோதண்டபாணி சுயேட்சை        967

க.செஞ்சிராஜா சுயேட்சை        2,940

மா.பெருமாள் சுயேட்சை        4,912

ச.ராமமூர்த்தி சுயேட்சை        3,614

சி.ராமமூர்த்தி சுயேட்சை        1,760

நோட்டோ                      16,921

Related Stories: