மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியால் கட்சி அலுவலகம் வெறிச்

ஈரோடு, மே 24:மக்களவை தேர்தலில் அதிமுகவினர் தோல்வி அடைந்ததால் ஈரோட்டில் கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
Advertising
Advertising

இதில், ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன் மற்றும் பிற கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் 20 பேரையும் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கிடையே தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் காலை 7 மணி முதல் திரண்டிருந்த அதிமுக.,வினர் 3வது சுற்று முடிந்து, முடிவுகள் வந்தவுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல், அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த தொண்டர்களும் நியூஸ் சேனல்களில் வெளியான தகவல்களை பார்த்து, ஒவ்வொருவராக புறப்பட்டு சென்றனர். இதனால் எப்போதும் தொண்டர்கள் திரண்டிருக்கும் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது

Related Stories: