திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி வெற்றி

கள்ளக்குறிச்சி, மே 24: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் உள்ள ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, டெங்குவெள்ளி, ஆத்தூர், ஏற்காடு என 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களித்தனர். கள்ளக்குறிச்சி தொகுதியில் கவுதமசிகாமணி (திமுக), சுதீஷ் (தேமுதிக), கோமுகி மணியன் (அமமுக), கணேஷ் (மநீம), சர்புதீன் (நாம் தமிழர் கட்சி) உள்பட 24 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு கள்ளக்குறிச்சி ஏகேடி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் மொத்தம் 12,40,375 வாக்குகள் பதிவானது. தபால் வாக்குகள் 5952 ஆகும்.

இதில் திமுக வேட்பாளர் 72,1713 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 3,21,794 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 50,179 வாக்குகளும், மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் 14,587 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 30,246 வாக்குகளும் பெற்றனர். இதில் நோட்டா 11,576. இதில் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி தேமுதிக வேட்பாளரை விட 3,99,919 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தொடர்ந்து அவருக்கு  தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயாதேவி தேர்தல் மேற்பார்வையாளர் சிவலோகி கலாசத் முன்னிலையில் சான்றிதழ் வழங்கினார். அப்போது பொன்முடி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏ மூக்கப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: