புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங். வைத்திலிங்கம் அமோக வெற்றி

புதுச்சேரி,  மே 24:   புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெற்றார். முதல் சுற்றில் இருந்தே அவர் தொடர்ந்து முன்னிலை பெற்றிருந்தார். நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதில் 2ம் கட்டமாக புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 18ல் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியில் வைத்திலிங்கம், என்ஆர் காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி உள்பட 18 பேர் போட்டியிட்டனர். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற்ற இத்தேர்தலில் 7,90,082 வாக்குகள் பதிவாயின. மொத்த வாக்குகள் 9,73,161. 970 வாக்குச்சாவடிகளில் 2,421 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1147 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1209 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 2 மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

 காரைக்காலில் 5 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, பட்டமேற்படிப்பு மையத்திலும், மாகே, ஏனாமில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதியிலுள்ள மையத்திலும் வைக்கப்பட்டன.அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுவையில் 2 மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும் மாகே, ஏனாமில் தலா ஒரு மையம் என மொத்தம் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபாட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எண்ணப்பட்டன. 35 நாட்கள் காத்திருப்புக்குப்பின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் பணியில் புதுச்சேரியில் மட்டும் 95 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 8 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குகள் எண்ணப்பட்டன. அவர்களுக்கு தலா 3 தொகுதிகள் வீதம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணும் அறையில் ஒரு சுற்றுக்கு 12 மேஜைகள் அதாவது 12 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளின் வாக்குப்பெட்டி வாக்கு எண்ணிக்கை அறைக்குள் காலை 7.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல்கட்டமாக மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜர் நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு,  ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாகே, ஏனாம் ஆகிய 12 தொகுதிகள் எண்ணப்பட்டன.

2வது கட்டமாக திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், முத்தியால்பேட்ைட, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 10 தொகுதிகள் பிற்பகல் 3 மணிக்கு பிறகு எண்ணப்பட்டன.

3வது கட்டமாக ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர், நிரவி திருபட்டினம் ஆகிய 8 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இரவு 9 மணிக்கு பிறகு எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்றிருந்தார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்  வாக்கு வித்தியாசத்தில்  அமோக வெற்றி பெற்றார். அவர் மொத்தம் வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வாக்குகள் பெற்றார்.

Related Stories: