திருநடன திருவிழா

கும்பகோணம், மே 23: சுவாமிமலை சர்வசக்தி மாரியம்மன் கோயிலின் 61ம் ஆண்டு பால்குட கோடாபிஷேகம், காளியம்மன் திருநடன உற்சவ திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 15ம் தேதி சுவாமிநாத சுவாமி ஆலயத்திலிருந்து எழுந்தருளி சர்வசக்தி மாரியம்மன் கோயிருக்கு வருதல் நிகழ்ச்சி, 17ம் தேதி சக்தி ஹோமம் நடந்தது. நேற்று காலை சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி, காளியம்மன் திருநடன உற்சவ திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று, நாளை காளியம்மன் திருவிழா நடக்கிறது. 26ம் தேதி பால்குட திருவிழா நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: