மலர் கண்காட்சி நிறைவு விழா வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு கவர்னர் கோப்பை

ஊட்டி, மே 22: ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்த 123வது மலர் கண்காட்சி நிறைவு விழாவில் தி கார்டன் ஆப் தி இயர் கவர்னர் சுழற் கோப்பையை வெலிங்டன் ராணுவ பயிற்சி தட்டி சென்றது.  மலர் கண்காட்சியின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் சுப்பைய்யன் வரவேற்றார். வேளாண்மைத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி., சண்முகப்பிரியா ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறந்த பூங்காக்களுக்கு ேகாப்பைகளை வழங்கி பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோட்டக்கலைத்துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மல்லிகை, கிராசாந்திமம், ரோஜா, மேரிகோல்டு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது,’’ என்றார்.

 நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில், ‘தி காா்டன் ஆப் தி இயர்’ கவர்னர் சுழற்கோப்பையை குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வழங்கப்பட்டது. ‘புளூம் ஆப் தி ேஷா முதலமைச்சர்’் தங்க சுழற்கோப்பை பெல்மவுண்ட் டெரஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இது தவிர சிறிய பூங்கா, புல்வெளி, கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை குடில்களில் வைத்திருந்தற்கான சுழற்கோப்பைகள், சிறிய பொது பூங்காக்கள், வீட்டு தோட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இம்முறை ஊட்டி மலர் கண்காட்சியின் கலந்து கொண்ட போட்டியாளா–்களுக்கு 50க்கும் மேற்பட்ட சுழற்ேகாப்பைகள் உட்பட பல்வேறு பிாிவுகளின் கீழ் மொத்தம் 637 பாிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செல்வராஜ், தோட்டக்கலை இணை இயக்குநா் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.  முடிவில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நன்றி கூறினார்.

Related Stories: