திருமானூர் மணல் குவாரி மூடல் விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர், மே21: அரியலூர் மாவட்டம் டெல்டா பகுதியான திருமானூர் கொள்ளிடத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இயங்கி வந்த மணல் குவாரி நேற்று இரவோடு மூடப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள், நீர்நிலை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த தகவலை உறுதி செய்த கொள்ளிட நீராதார பாதுகாப்பு குழுவினர் தொடர்ச்சியாக நாங்கள் செய்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் இதற்கு ஒத்துழைத்த பொதுமக்களுக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.

இதனால் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் நிம்மதி அடைந்துள்ளனர். காரணம் இனி மூன்றாண்டுகளுக்கு இங்கு மணல் குவாரிகள் அமைக்கப்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர். இரவு பகலாக எந்த நேரமும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த திருமானூர் பகுதி மக்கள் தற்போது அமைதியாக உள்ளனர். இதன் காரணமாக வருவாய்துறையினர், காவல்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: