பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மே 21:  இந்துகளுக்கு எதிராக பேசியதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜ,

இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் நேற்று முன்தினம் கமல் உருவபொம்மையை இந்து முன்னணி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனை கண்டித்து பாஜக மாநில இளைஞரணி சார்பில் சாரம் அவ்வை திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் மவுலித்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சிவானந்தம், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertising
Advertising

 இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர் சாய்.சரவணகுமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்டோர் கமலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Related Stories: