கலந்தாய்வு முன்னுரிமை பட்டியலுக்கு ஒப்புதல்

நெல்லை, மே 19:  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ராஜகுமார், செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் விடுத்துள்ள கூட்டறிக்கை: ஊராட்சி பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலுக்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒருசில வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து இதுவரை ஒப்புதலுக்கான முன்னுரிமை பட்டியல் அனுப்பப்படவில்ைல. இதுகுறித்து கல்வித்துறையில் கேட்டபோது தேவையற்ற காலதாமத்தை தவிர்க்க வேண்டும் என கடந்த மாதமே அனைத்து கல்வி மாவட்ட அலுவலர்கள் வட்டார அலுவலர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertising
Advertising

அனைத்து வட்டார ஆசிரியர்களும் உடனடியாக அந்தந்த வட்டார கல்வி அலுவலகம் சென்று முன்னுரிமை பட்டியலை கடந்த ஆண்டு பட்டியலோடு ஒப்பிட்டு பார்ப்பதுடன் தங்களது முன்னுரிமையில் குறைகள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து உரிய ஆதாரங்களுடன் மாவட்ட கல்வி அலுவலருக்கு முன்னநகலாக அனுப்பவேண்டும்.  முதன்மை கல்வி அலுவலருக்கும் நகல் அனுப்பவேண்டும். இதனால் கடந்த ஆண்டு ெபாது மாறுதல் கலந்தாய்வின் போது தேவையற்ற குழப்பம் சச்சரவுகள் ஏற்பட்டு போன்று நடைபெறாமல் தவிர்க்க முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: