குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் யானை முகாம்

குன்னூர், மே 17:   குன்னூர் பகுதியில் உள்ள வனத்தில் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் தண்ணீர், இரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அப்போது சில சமயங்களில் மனித விலங்கு  மோதல் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்கும்  வகையில் வனத்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர், பகுதியில் குட்டியுடன் யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் யனையை கண்டுசெல்கின்றனர். இதைஅறிந்து வந்த குன்னூர் வனத்துறையினர் யானை விரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இருந்த போதிலும் யானை வனத்திற்கு செல்லமால் இப்பகுதியிலேயே தொடர்ந்து முகாமிட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இந்த சாலையை கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து யானையை துன்புறுத்த வேண்டாம்’ என்றனர்.

Related Stories: