திருக்குறள் கூட்டமைப்பு கருத்தரங்கு

கன்னியாகுமரி, மே 15: திருவள்ளுவர் பிறந்த 2050ம் ஆண்டையொட்டி உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் விழா கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நேற்று தொடங்கியது. விழாவில் நேற்று காலை விவேகானந்த கேந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு பதாகைகள் ஏந்தி திருக்குறளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ெதாடர்ந்து விவேகானந்த கேந்திரா வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது. உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் திரைப்பட இயக்குநர் சேகர் தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார்.

 இதில் சிறப்பு விருந்தினர்களாக உலக தமிழர் ேதசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கன்னியாகுமரி வரலாற்று ஆய்வு மைய தலைவர் பத்மநாபன், பாண்டிச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் முத்து ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆதிலிங்கம், செலின், நெடுஞ்சேரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருக்குறளை அறநூலாக அறிவிக்க தமிழ்நாடு அரசை கேட்டும், இந்திய பொதுமறை நூலாக அறிவிக்க மத்திய அரசை கேட்டும், உலக பொதுமறையாக அறிவிக்க ஐநாசபையை கேட்டும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் பெயரால் உலக தரம் வாய்ந்த ஆய்வரங்கம் அமைக்கவேண்டும், திருவள்ளுவர் வரலாற்றை பள்ளிகளில் பாடமாக சேர்க்க வேண்டும் எனக்கேட்டும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: