தடை உத்தரவை மீறி ஊருக்குள் நுழைந்த ரவுடி ைகது

புதுச்சோி, மே 15:  மேட்டுப்பாளையம் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி ஊரில் நுழைந்த ரவுடி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல் கோரிமேட்டில் கத்தியுடன் சுற்றிய 2 பேர் பிடிபட்டனர். புதுவை சாணரப்பேட்ைட புதுத் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சங்கர் கணேஷ் (21). ரவுடியான இவர் மீது கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி தினத்தில் நடந்த 3 ரவுடிகள் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றவர். இவர் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.மக்களவை தேர்தலை முன்னிட்டு இவரை 2 மாதம் ஊரில் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில நாட்களாக இந்த தடையை மீறி அவர் ஊரில் நடமாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், எஸ்ஐ இனியன் தலைமையிலான போலீசார் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள ஒரு வங்கி அருகே பதுங்கியிருந்த சூர்யாவை பிடித்தனர். பின்னர் அவரை சோதனையிட்டதில், கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்த நிலையில், தடையை மீறி ஊரில் நுழைந்தது, ஆயுதம் மறைத்து வைத்திருந்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதேபோல் கோரிமேடு எஸ்ஐ திருமுருகன் தலைமையிலான போலீசார், அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றபோது கத்தியுடன் நின்றிருந்த தட்டாஞ்சாவடியை சேர்ந்த ரவுடி விக்கி என்ற விக்னேஷ் (22), அவரது நண்பரான காமராஜ் நகர் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்ற லோகநாதன் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் விக்கி மீது, வழுதாவூர் ரோட்டில் நடந்த ஜாக்கி கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: