விதிமீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

புதுச்சேரி, மே 15: புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை, கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகளில் எந்தவிதமான வகுப்புகளும் நடத்தக்கூடாது என்பது குறித்து பல்ேவறு சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. எனினும், சில தனியார் பள்ளிகள் கல்வித்துறையின் அறிக்கையை அலட்சியப்படுத்தி தொடர்ந்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் இத்துறையால் பெறப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள எந்த பள்ளியிலும் பெற்றோர்களின் ஒப்புதலுடன் கூட மாணவர்களுக்கு எவ்விதமான வகுப்புகளும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறும் பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குநர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் துணை இயக்குநர் (முதியோர் கல்வி) ஆகியோரது தலைமையில் ஆய்வுக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பள்ளி கல்வித்துறையின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது புதுச்சேரி பள்ளி கல்வி விதிகள் 1996ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.
Advertising
Advertising

Related Stories: