கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கு கிழிந்த கூடாரம்

நாமக்கல், மே 15: நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சோதனை கூடாரம் கனமழைக்கு கிழிந்து உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. அப்போது, கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வரும் பொதுமக்கள், அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அதிகாரிகள் முன்னிலையில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.  இதனை தடுக்கும் வகையில், எஸ்பியின் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தின் மெயின் கேட்டில் டெண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை அந்த டெண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள சோதனை கூடாரத்திற்கு அழைத்து சென்று தீவிர சோதனை நடத்தி மண்ணெண்ணை பாட்டில் மற்றும் கேனுடன் வந்தால் அதனை பறிமுதல் செய்து அவர்களை விசாரணை செய்த பின் கலெக்டரை சந்திக்க அனுப்பப்படுவர். அதே போல் சந்தேகப்படும் நபர்களையும் கூடாரத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், நாமக்கல்லில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதில், கலெக்டர் அலுவலக வாளகத்தில் இருந்த சோதனை கூடாரம் கிழிந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்து, நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்பு சோதனை கூடாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கூடாரம் இருந்த இடம் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.

Related Stories: