நிலுவை ஊதியம் வழங்க கோரி வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

வத்தலக்குண்டு, மே 14: நிலுவை ஊதியம் வழங்க கோரி வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் தொட்டி இயக்குனர்கள், துப்புரவு தொழிலாளர்கள் நேற்றுமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிஐடியு சங்க மாவட்ட துணை செயலாளர் பிகே தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் ராமசாமி, பாண்டி, ஜெயராஜ் ராஜா முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 7வது கமிஷன் நிலுவை ஊதிய தொகையை வழங்க வேண்டும்,

துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும், குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு டார்ச் லைட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயசந்திரன், வேதா ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அவர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகே அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: