திருவில்லி. வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவில்லிபுத்தூர், மே 10: திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கொடிப்பட்டம் கோயிலை சுற்றி மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழா வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் வைத்தியநாத சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளுகின்றனர். 15ம் தேதி திருக்கல்யாணம், முக்கிய நிகழ்ச்சியாக 17ம் தேதி தேரோட்டமும், 18ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி ஜவகர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Related Stories: