தலைவாசல் அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வனக்காவல் நிலையத்தை கண்டுகொள்ளாத அவலம்

ஆத்தூர், மே 9: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சார்வாய் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட வனக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்வு தலைவாசல் பகுதியில் வீசிய சூறை காற்றில் இந்த வனக்காவல் நிலையத்தின் மேற்கூரை பறந்தது. மேலும், கட்டிடமும் சேதமடைந்தது. இதனை தற்போது வரையிலும் வனத்துறையினர் சீரமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால், இப்பகுதி பொதுமக்கள் வனக்காவல் நிலைய கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், நிரந்தர பணியாளர்களை நியமித்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: