காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயம்,மே9: காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள  தேவாங்கபுரம்  சௌடேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மன்  கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலு வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திங்கள்கிழமை மாரியம்மனுக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், பால் குட ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது.நேற்று பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலய குளக்கரையில் இருந்து பூவோடு எடுத்து வந்து மாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 மாலையில் மாவிளக்கு வழிபாடும் நடைபெற்றது. இன்று சவுண்டம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

 பஜனை மடம் கிழக்கு வீதியில் வீதிஉலா துவங்கி, புதுவிநாயகர் வீதி, சுபாஷ் வீதி, திருவள்ளுவர் வீதி, புலிமா நகர், கார்த்திகை நகர், காந்தி நகர் வழியாக வந்து நிறைவடைய உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Related Stories: