திருவில்லிபுத்தூர், திருச்சுழி கோயில்களில் நடந்தது மதிமுக ஆண்டு விழா

சாத்தூர், மே 8:  சாத்தூர் முக்குராந்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 26வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தூர் நகரச் செயலாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. முன்னாள் எம்.பி.சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். பின்னர் அரசு மருத்துவமனை மற்றும் அன்னை தெரசா குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று பால், பிரட் மற்றும் இனிப்பு வழங்கினர்.

Related Stories: