கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கொடைக்கானல், மே 8: கொடைக்கானல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.கொடைக்கானல் நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆணையாளர் முருகேசன் உத்தரவுப்படி கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இதேபோல் நேற்று நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் லாஸ்காட் சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளை அகற்றினர்.

தொடர்ந்து கல்லறை மேடு பகுதியிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.இதுகுறித்து ஆணையாளர் முருகேசன் கூறுகையில், ‘கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இனி ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றியவுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான மற்றும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: