காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம்

கடவூர், மே7: காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி 2019-20ம்  ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து கல்லூரி முதல்வர் தேன்மொழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி 2019-20ம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. நேரடியாக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு வருகின்ற மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு வருகின்ற மே மாதம் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாண்டு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான இணையான கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150. தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்று நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த கல்லூரியில் சேரும் மாணவர்கள் அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை தகுதி உள்ள மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை இலவச மடிக்கணினி வழங்கப்படும். கடந்த கல்வியாண்டில் சுமார் 100 மாணவர்களுக்கு வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பினை கல்லூரி நிர்வாகத்தால் பெற்றுத்தரப்பட்டுள்ளது. எனவே பிளஸ் 2, மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்  என அதில்  தெரிவித்துள்ளார்.

Related Stories: