நாசரேத் அருகே இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

நாசரேத், மே 7: நாசரேத் அருகே இளம்பெண்ணிடம் நகை பறித்தவரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை  மாவட்டம், திருவேங்கடம் தாலுகா உசிலங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிப்பாண்டியன். இவரது மகள் சீதா (25). தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள கச்சனாவிளையில்  இயங்கும் சிறுமியர் இல்லத்தில் தங்கி வார்டனாக வேலை பார்த்து வரும் இவர்,  நேற்று முன்தினம் காலை தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஆரோக்கிய மாதா  ஆலயத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர், சீதா கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அதே பைக்கில் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீதா நாசரேத் போலீசில் நகை பறிப்பு குறித்து புகார் கொடுத்தார்.அதன் பேரில் வழக்குப் பதிந்த நாசரேத் எஸ்ஐ மணி, நகை பறித்தவரைத் தேடி வருகிறார்.

Related Stories: