தாலுகா அலுவலகம் முற்றுகை

குமாரபாளையம்:  குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு, கடந்த 22 மாதங்களாக போராடி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதையடுத்து வரும் 19ம்தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த, வாய்தா கொடுக்கப்பட்டுள்ளது.  தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு 20 நாட்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. நேற்று காலை சிஐடியூ தொழிற்சங்கத்தினர், குமாரபாளையம் தாசில்தார் தங்கத்தை நேரில் சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அப்போது திடீரென தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், பிரச்னையை  உடனடியாக தீர்க்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: