இலங்கையில் குண்டு வெடிப்பு எதிரொலி ரங்கம் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்புசெக்யூரிட்டி ஏடிஎஸ்பி ஆய்வு

திருச்சி, ஏப்.30: இலங்கையில் கடந்த 21ம்தேதி ஈஸ்டர் திருநாளன்று பிரார்த்தனை நடந்த தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை அடுத்து அண்டை நாடான இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்கள், தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

இதில் திருச்சியில் புகழ்பெற்ற ரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில், மலைக்கோட்டை ஆகிய கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் முகப்பில் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்களை சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதில் ரங்கத்திற்கு ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கும் வேளையில் உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்யவும், கூடுதலாக ஆலோசனைகள் வழங்கவும் செக்யூரிட்டி ஏடிஎஸ்பி வீரபெருமாள் நேற்று திருச்சி வந்தார். அவருடன் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் கபிலன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோருடன் கோயில்களில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

Related Stories: