கரூர் மக்கள் பாதை அருகே நீண்ட நேரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் அதிகாரிகள் மெத்தனம்

கரூர், ஏப். 26:  கரூர் மக்கள் பாதை அருகே பிற வாகனங்களுக்கு இடையூறாக கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து மார்க்கெட், மாரியம்மன் கோயில், பழைய திண்டுக்கல் சாலை, நகராட்சி அலுவலகம், வர்த்தக நிறுவனங்கள் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மக்கள் பாதையின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். எனவே, மக்கள் பாதைச் சாலை எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், மக்கள் பாதை சாலையோரம் அவ்வப்போது கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் இந்த சாலையில் எளிதாக செல்ல முடியாத நிலை அடிக்கடி நிலவி வருகிறது. ஒருசில சமயங்களில் விபத்துக்களும் நடைபெற்றுள்ளது. எனவே, மக்கள் பாதை சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தம் குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: