பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் தற்காலிக கொட்டகை அமைப்பு

உளுந்தூர்பேட்டை,  ஏப். 25: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும்  நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால் பேருந்து நிலைய பகுதியில்  விழுப்புரம், கடலூர், சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கும்  பகுதியில் நிழற்குடை இல்லாததால் கடுமையான வெயிலில் நின்று பயணிகள்,  முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதியுடன் பேருந்துகளில் சென்று  வருகின்றனர். இது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தினகரன்  நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று பேரூராட்சி பணியாளர்கள் பேருந்து நிலைய பகுதியில்  பயணிகள் நிற்பதற்கு வசதியாக தற்காலிக கீற்று கொட்டகைகள் அமைத்தனர். இதனால்  பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் இந்த  இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியில் இருந்து நிரந்தரமாக  பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: