அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

அருப்புக்கோட்டை, ஏப். 25: அருப்புக்கோட்டை புளியம்பட்டி, திருநகரம், சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்களால் ஆயிரங்கண் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி எழுந்தருள்வார். 8ம் நாள் திருவிழாவாக வருகிற 30ம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதலும், 9ம் நாள் திருவிழாவாக மே 1ம் தேதி பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துவர். 10ம் நாள் திருவிழாவாக மே 2ம் தேதி தேரோட்டமும், 11ம் நாள் திருவிழாவாக மே 3ம் தேதி பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோயில் கலையரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஏற்பாடுகளை புளியம்பட்டி திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர் சண்முக கணபதி, செயலாளர் சோமராஜன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் முனுசு கருப்பசாமி, விழாக்குழு தர்மர் ஆறுமுகம் உட்பட புளியம்பட்டி, திருநகரம், சாலியர் மகாஜன பரிபாலன சபை நிர்வாக குழுவினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: