கடத்தூர் பகுதியில் முலாம்பழம் சாகுபடி தீவிரம்

கடத்தூர், ஏப்.23: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து, தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழ வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. முலாம்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால், இதை சிறுவர்கள் முதல் பலதரப்பினரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனையடுத்து, கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் முலாம்பழம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் முலாம்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரம் ஒரு பழம் ₹10 என விற்கப்பட்ட நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது முலாம்பழம் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டங்களுக்கே வியாபாரிகள் நேரடியாக வந்து, மொத்தமாக பழங்களை வாங்கி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: