ரவணசமுத்திரத்தில் ஈஸ்டர் பண்டிகை

கடையம், ஏப். 21:  கடையம் அருகே ரவணசமுத்திரம் சேவாலயா அமைப்பின் சார்பில் மகாகவி பாரதியார் சமுதாய கல்லூரியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆழ்வார்குறிச்சி மிஷன் இந்தியா ஆபிரகாம் ஜோசப் சிறப்புரையாற்றினார். ஆழ்வார்குறிச்சி ஏஜி சபை எட்வர்டு தலைமை வகித்தார். சேவாலயா அமைப்பின் நிறுவனர் முரளிதரன் வரவேற்றார். இதில் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பொறுப்பாளர் சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: