பைக்குகள் திருட்டு

சிவகிரி, ஏப். 21: சிவகிரி  அருகே வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது.

 சிவகிரி  அடுத்த உள்ளார் தளவாய்புரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கோபி (23). திருச்சியில் தனியார் பெட்ரோல்  பங்க் கேசியராக வேலை பார்த்து வரும் இவர், தேர்தலில் வாக்களிக்க பைக்கில் ஊருக்குவந்தார். கடந்த 18ம் தேதி  வாக்களித்துவிட்டு இரவு வீட்டு முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு  தூங்கச் சென்றார். மறுநாள் காலை திரும்பியபோது பைக்கை காணவில்லை. ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள  விலை உயர்ந்த இந்த பைக்கை கோபி கடந்த 10  மாதங்களுக்கு முன்னர் தான் புதிதாக வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சிவகிரி போலீசார், பைக்கை திருடிச்சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
Advertising
Advertising

புளியங்குடி:  புளியங்குடி வாலன் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் பிரவீன்குமார் (23). ஐடிஐ படித்து வரும் இவர் நேற்றுமுன்தினம் சிந்தாமணி பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு அப்பகுதியில் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு எதிர்ப்புறம் சென்றார். திரும்பிவந்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், பைக்கை திருடிச்சென்ற மர்ம நபரைத் தேடி வருகிறார்.

Related Stories: