புன்னையாபுரம் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா

புளியங்குடி, ஏப். 21: புளியங்குடி அருகே  புன்னையாபுரம் கற்பக நாச்சியார் அம்மன் கோயிலில்  சித்ரா பவுர்ணமி திருவிழா  விமரிசையாக நடந்தது. புளியங்குடி அருகே புன்னையாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் முந்தல் மலையில் உள்ள கற்பகநாச்சியார் அம்மன் கோயில் 5ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா காலை 4மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு ஆவரண பெட்டி அழைத்து வருதல்  நடந்தது.  விரதமிருந்த பக்தர்கள்   பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து  வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. காலை 9 முப்பது மணிக்கு  கணபதிஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம் நடந்தது. நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடரந்து 1 மணிக்கு  அன்னதானம் நடந்தது. ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. மாலையில்  பஜனை நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு புஷ்பாஞ்சலியும் இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை பவுர்ணமி பூஜை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: