திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்

கோவை, ஏப். 19: திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கோவை மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர் நடராஜன் தெரிவித்தார்.கோவை மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பி.ஆர் நடராஜன் நேற்று கோவை அரசினர் மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வாக்களித்தார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “இந்த தேர்தலில் அனைத்து வாக்களர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகம் தலை நிமிரும் என்றார்.

Advertising
Advertising

Related Stories: