என்ஆர் காங். பிரமுகரை தாக்கிய கும்பல் மீது போலீஸ் வழக்குபதிவு

புதுச்சேரி,  ஏப். 19:  ரெட்டியார்பாளையத்தில் என்ஆர் காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய  கும்பல் மீது 6 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.புதுவை  நாடாளுமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்காக  கொடுக்கப்பட்ட பணத்தை நிர்வாகிகளிடம் வழங்காதது குறித்து அக்கட்சியின்  நிர்வாகியான மேரி உழவர்கரையில் வசிக்கும் தெய்வீகன் (36), சமூக வலைதளத்தில்  ஒரு தகவல் பதிவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரின்  ஆதரவாளர்கள் கடந்த 15ம்தேதி நள்ளிரவில் அஜீஸ் நகரில் உள்ள ஒரு தனியார்  பள்ளி அருகில் தெய்வீகனை தாக்கியதாகவும் தகவல் பரவியது.இதில்  காயமடைந்ததாக கூறப்படும் தெய்வீகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதேவேளையில் இத்தகவல் உண்மைக்கு  புறம்பானது என தெய்வீகன் மறுத்து பேசும் வீடியோவும் பரவி பரபரப்பை  ஏற்படுத்தியது.இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி  ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் தெய்வீகன் புகார்  அளித்தார். வடக்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்  சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையிலான போலீசார் அவரிடம்  தீவிர விசாரணை நடத்தினர்.இதுதொடர்பாக லெனின் பாஸ்கர், பாலு, சங்கர்,  செய்யது, பூபேஷ், சிவக்குமார் உள்ளிட்ட கும்பல் மீது ஜாமீனில் வெளிவர முடியாத  6 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி  வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: