கூத்தாநல்லூர்,ஏப்18: கூத்தாநல்லூர் திருவாரூர் நெடுஞ்சாலையில்கமலாபுரம் அருகேநெடுஞ்சாலைத்துறையினரால்மேற்கொள்ளப்படும் பாலப்பணிகள்நடை பெறும் இடங்களில் இரவுநேர ஒளிரும் புளோரசென்ட் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமலாபுரம் அருகேஉள்ளமேலஅணக்குடிமற்றும் வெள்ளகுடி ஆகிய இடங்களில் பிரதானசாலையில்பாலம் சீரமைத்துபுதியபாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இரண்டு பாலப்பணிகளுமே வளைவான இடங்களில் ஆபத்தான வகையில் வாகனங்கள் கடக்கும் இடங்களில்அருகருகே நடைபெறுகின்றன. மேலும் நாள்ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டஇருசக்கரமற்றும் நான்குசக்கரவாகனங்கள்பயணிக்கும் இந்தசாலையில், சாலையின் ஒரு பகுதியைஅடைத்துமற்றொருபகுதியில்பணிகள்நடைபெறுகிறது. அந்தபகுதிவேலைமுடிந்ததும் அடுத்தபகுதி அடைக்கப்பட்டு பணிமுடிந்த பகுதி போக்குவரத்துக்குதிறக்கப்படும்.