வாக்குச்சாவடி எல்லைக் கோடு வரையும் பணி

காங்கயம், ஏப். 17: காங்கயத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அருகே உள்ள சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி நேற்று நடந்தது.  தமிழகம் முழுவதும் நாளை (18ம் தேதி) மக்களை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்குச்சாவடி சுற்றுப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், வாக்குச் சாவடிக்கு அருகே உள்ள சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி நேற்று நடந்தது. காங்கயம் நகரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகே, சாலையில் அடையாள எல்லைக்கோடு வரையும் பணியில் காங்கயம் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

Related Stories: