பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 பேர் கைது

திருப்பூர், ஏப். 17: திருப்பூரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் தாராபுரம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, முத்தனம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு ெசன்ற போலீசார், கடைகளில் சோதனை நடத்தி, புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ரமேஷ் என்கிற ராமச்சந்திரன் (29), ராஜேஷ்குமார் (35), விஸ்வநாதன் (43) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.  இதேபோல் ஓடக்காடு காவேரி வீதியில் புதுப்பட சி.டி.க்களை விற்பனை செய்த கரசான் (42), பார்க் ேராட்டில் சீட்டாட்டம் ஆடிய ஷேக் முகம்மது(27) உள்பட 6 பேர், பழைய பஸ் நிலையம், எம்.எஸ்.நகர், காங்கயம் ரோடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நாகப்பன் (37), ராதாகிருஷ்ணன் (33), கணேசன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: