மீன் பிடி தடைகாலம் எதிரொலி மீன் விலை அதிகரிப்பு

திருப்பூர், ஏப். 17:  தமிழக கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்கத்திற்காக மீன் பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மொத்த சந்தைக்கு மீன்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மொத்த காய்கறி சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் மொத்த மீன் மார்க்கெட் செயல்படுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமாரி, ராமேஸ்வரம், கொச்சி ஆகிய கடலோர பகுதிகளிலிருந்து தினமும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் 70 டன் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஆண்டுக்கு ஒரு முறை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

  இந்த 45 நாட்களில் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகள், துடுப்பு படகுகள், கட்டுமரங்களை பராமரிப்பு செய்து, புதுப்பித்துக்கொள்கின்றனர்.

கேரளாவில் இருந்து மீன் கொண்டு வர போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என்பதால், மொத்த வியாபாரிகள் மீன்களை அதிகளவு கொள்முதல் செய்வது இல்லை. தமிழகத்தில் உள்ள டேம் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடல் மீன்கள், இறால் ஒரு கிலோ ரூ.550க்கும், சங்கரா ரூ.400க்கும், பாரை ரூ.360க்கும், கட்லா ரூ.300க்கும், கொடுவா ரூ.350க்கும், மத்தி் ரூ.150 க்கும், நண்டு ரூ.440க்கும் விற்பனையானது. டேம் மீனான கட்லா, ரோகு ஆகியவை ரூ.80 முதல் ரூ.120 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலை அதிகரிப்பால், நுகர்வோரின் வருகை குறைந்துள்ளது.

Related Stories: