கோவில்பட்டி வேல்ஸ் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி, ஏப்.17: கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. வேல்ஸ் பள்ளி குழுமத்தினர் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். முதல்வர் சாவியோலூயிஸ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கூட மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து பேசினார்.  திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி பேராசிரியர் ஆண்டனிஸ்டீபன் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். வேல்ஸ் பள்ளி குழுமத்தின் தாளாளர் வீரவேல்முருகன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.    தொடர்ந்து மாணவ, மாணவியரின் பரதநாட்டியம், தமிழக மாவட்டங்களை கூறுதல், மாநிலங்களின் தலைநகரம், மொழி, தமிழ் ஆண்டு, ஆங்கில நாடகம், பாடல், மேற்கத்திய நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சி நடந்தது. ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஹம்சா சாவியோலூயிஸ் நன்றி கூறினார்.

Related Stories: