திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 1,600 போலீசார் பாதுகாப்பு டிஐஜி வனிதா தகவல் 2 சிறப்பு எஸ்பிக்கள் தலைமையில்

வேலூர், ஏப்.16:திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 2 சிறப்பு எஸ்பிக்கள் தலைமையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று டிஐஜி வனிதா தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்த துணை ராணுவம் போலீசார் என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமி தினத்திலேயே, மக்களவை தேர்தலும் நடைபெற உள்ளது. சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.  இதனால் தேர்தல் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் என்று தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமிக்கு முத்தரசி, ஷியாமளா ஆகிய 2 சிறப்பு எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில், கிரிவலம், போக்குவரத்து என்று 3 ஆக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கோயிலுக்கு மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சித்ரா பவுர்ணமிக்கு மட்டும் தனியாக 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று டிஐஜி வனிதா தெரிவித்தார்.

Related Stories: