வரிகளை குறைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளர் ராஜவர்மன்

சாத்தூர், ஏப். 12: சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் போட்டியிடுகிறார். சாத்தூர் மேற்கு ஒன்றியம் முழுவதும் அவர் வாக்கு சேகரித்தார். சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர் .ராஜவர்மன்  கேட்டுகொண்டார். தொடர்ந்து அண்ணாநகர், பெரியார்நகர், சிதம்பரம்நகர், நியூ காலனி, சாத்தூர் மெயின் ரோடு உட்பட 25 இடங்களில் வாக்கு சேகரித்தார், அப்போது அவர் பேசுகையில், சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவு செய்வேன். அனைத்து பகுதிகளுக்கும் சாலை அமைத்து தருவேன். பல மடங்கு உயர்த்தப்பட்ட நகராட்சி சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் வரி ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் சாத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் அமைத்து அனைவருக்கும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் சாத்தூரில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த நவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரச்சாரத்தின் போது வேட்பாளருடன் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: