வத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

வத்திராயிருப்பு, ஏப். 11: வத்திராயிருப்பு நாடார் உறவின்முறை சார்பில் கடந்த 3 நாட்களாக மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு ஆக்கி படைத்தல் நிகழ்ச்சியும்,  இரண்டாம் நாள் காலை கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு  செய்தனர். கடைசி நாளான நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை கோயில் முன் பூ வளர்த்தனர். கோயில் முன்பு பெண்கள் அக்னிச்சட்டி மற்றும் மஞ்சள் நீர் எடுத்து நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அக்னிச்சட்டி மற்றும் மஞ்சள்நீர் இறக்கி வைத்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். அதன்பின்னர் மஞ்சள்நீர் விளையாட்டு நடைபெற்றது. மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உறவின் முறை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: