குன்னுார் தோட்டத்தில் புகுந்த காட்டெருமைகள்

குன்னூர், ஏப். 9: நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவிவருவதால் வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் தாவரங்கள் கருகி காணப்படுகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரத்துவங்கியுள்ளன. குன்னூர் அருகேயுள்ள கோலணிமட்டம் பகுதியில்   மலை காய்கறிகளான கேரட் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இதனால் இந்த தோட்டங்களில் நீர் மற்றும் உணவு தேடி காட்டெருமைகள் வந்து செல்கின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கோலணிமட்டத்தில் தினமும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாய நிலங்களை சூறையாடி செல்கின்றன. வனத்துறையினரும் இதனை கண்டுகொள்வதில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: