நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டவர் ஜெயவர்தன்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு காலத்தில் தொகுதி வளர்ச்சிக்காக மிகச்சிறந்த திட்டங்களை செய்து வந்திருக்கிறார் ஜெயவர்தன். இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டியதற்கு, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் நல்ல மருத்துவமனைகளை கொண்டு வந்திருக்கிறார். தொகுதி முழுவதும் ஏழை எளிய மக்களிடம் இயல்பாக பழகுகிறார்.நாடாளுமன்றத்தில் ஜெயவர்தன் தென் சென்னைக்காக போராடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Related Stories: