நரசிங்கபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் மனு

ஆத்தூர், ஏப்.4: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், லட்சுமணசமுத்திரம் பழைய உடையம்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள், சேலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: நரசிங்கபுரம் உடையம்பட்டி ஏரிக்கரை அருகே, சஞ்ஜுவராய சுவாமி, கன்னிமார் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இது இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், கோயில் நிலங்களை தனியார் அமைப்பினர் சிலர் ஆக்கிரமித்து, நிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கைப்பற்றி, கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரசினை ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: