சோழவந்தான் பகுதியில் வாக்குச்சாவடிகளில் பார்வையாளர் ஆய்வு

சோழவந்தான்,ஏப். 4: சோழவந்தான் பகுதி வாக்குச்சாவடிகளில் தேனி தொகுதி தேர்தல் பார்வையாளர் யுகேந்திரநாத் சர்மா ஆய்வு மேற்கொண்டார். மேலக்கால், திருவேடகம், சோழவந்தான் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட அவர், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து உதவி தேர்தல் அலுவலர் விஜயா, தாசில்தார் இளமுருகன் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், பழனி மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: